பொங்கல் நல்வாழ்த்துகள்கூறிய மம்தா பானர்ஜி , ஹர்பஜன் சிங்


பொங்கல் நல்வாழ்த்துகள்கூறிய   மம்தா பானர்ஜி , ஹர்பஜன் சிங்
x
தினத்தந்தி 14 Jan 2018 7:16 AM GMT (Updated: 2018-01-14T12:46:55+05:30)

மேற்குவங்க முதல்-அமைச்சர் மதாபானர்ஜி . ஹர்பஜன் சிங் தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறி உள்ளனர்.#Pongal #pongalwidhes


உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை கொண்டாடி வரும் நிலையில், பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழில் வாழ்த்துக்களை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டு மக்களுக்கு இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்; மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பொங்கல் வாழ்த்து  தெரிவித்து உள்ளார்.

Wishing good health, happiness and prosperity to all my Tamil brothers and sisters on the occasion of Pongal

தமிழ் நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்

— Mamata Banerjee (@MamataOfficial) 14 January 201


மகிழ்வோடு பொங்கட்டும் புது பொங்கல் என இந்திய கிரிக்கெட்  அணியின் சுழல்பந்துவீச்சாளர்  ஹர்பஜன் சிங் தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறி அசத்தியுள்ளார்.

டுவிட்டரில் பொங்கல் வாழ்த்துக்கூறிய கூறியுள்ள அவர்,  வேகமும் , விவேகமும், உழைப்பும், தூய்மையும் சொத்தாய் கொண்ட தமிழ் மக்கள் வாழ்வில் மகிழ்வோடு பொங்கட்டும் புது பொங்கல். என் இதயம் கனிந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் என்றும் அன்புடன் உங்கள், ஹர்பஜன் சிங் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story