மக்கள், இளைஞர்களை ஈர்க்கும் சக்தி திமுகவிற்கு இல்லை: திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை - ஆடிட்டர் குருமூர்த்தி


மக்கள், இளைஞர்களை ஈர்க்கும் சக்தி திமுகவிற்கு இல்லை: திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை - ஆடிட்டர் குருமூர்த்தி
x
தினத்தந்தி 14 Jan 2018 3:29 PM GMT (Updated: 2018-01-14T20:59:47+05:30)

மக்கள், இளைஞர்களை ஈர்க்கும் சக்தி திமுகவிற்கு இல்லை. திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.#Vairamuthu #Rajinikanth

சென்னை,

சென்னையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசுகையில்,

ரஜினி ஆன்மீக அரசியல் என்று கூறியது, கழக கட்சிகளை போல் தன்னுடைய ஆட்சி இருக்காது என்பதை காட்டுகிறது. மக்கள், இளைஞர்களை ஈர்க்கும் சக்தி திமுகவிற்கு இல்லை. திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை.

தமிழகத்தில் காங்., பாஜக வளர வேண்டும் என்றால், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க கூடாது. ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது தவறானது. அவரை போன்றவர்களுக்கு விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தக் கூடாது.

ஹிந்து நம்பிக்கையை  அவமானம் செய்வது திராவிட டி.என்.ஏ வில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆன்மிகத்தை மறக்கடித்துள்ளனர் 
ஆன்மிகம் என்றால் என்ன என்பதை விளக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 12இல் உச்ச நீதிமன்றத்தில் நடந்த சம்பவம், குழாயடி சண்டை போல் இருந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story