வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி தரவும் தொண்டர்கள் தயார் - நயினார் நாகேந்திரன்


வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி தரவும் தொண்டர்கள் தயார் - நயினார் நாகேந்திரன்
x
தினத்தந்தி 17 Jan 2018 2:36 PM GMT (Updated: 2018-01-17T20:06:41+05:30)

வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி தரவும் தொண்டர்கள் தயாராக உள்ளனர் என நயினார் நாகேந்திரன் பேசிஉள்ளார். #NainarNagendran #Vairamuthu #BJPநெல்லை,


ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தவறுதலான கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தியும் இந்துக்கள் தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், கவிஞர் வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி தரவும் தொண்டர்கள் தயாராக உள்ளனர். வருங்காலங்களில் இந்துக்களை பழித்து பேசினால் கொலைசெய்யவும் தயாராகுங்கள் என பேசிஉள்ளார். இது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

ஆர்.கே.நகர் தோல்வியை மறைக்கவே, வைரமுத்து போன்றோரை திமுக தூண்டிவிடுகிறது எனவும் குற்றம் சாட்டிஉள்ளார் நயினார் நாகேந்திரன்.


Next Story