சமூக நீதிக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது: மு.க. ஸ்டாலின்


சமூக நீதிக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது:  மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 14 April 2018 11:33 AM IST (Updated: 14 April 2018 12:17 PM IST)
t-max-icont-min-icon

சமூக நீதிக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் மு.க. ஸ்டாலின் கூறினார். #MKStalin #AmbedkarStatue

சென்னை,

டாக்டர் அம்பேத்கரின் 127வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இன்று மரியாதை செலுத்தினர்.

இதேபோன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  அவருடன் திருநாவுக்கரசர், முத்தரசன், திருமாவளவன் மற்றும் வேல்முருகன் உள்ளிட்டோரும் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, தமிழ் புத்தாண்டு குறித்த ஆளுநர் கருத்து குறித்து கவலையில்லை என கூறினார்.

தொல்காப்பியர் கூற்றுப்படி சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என திருவிடந்தை ராணுவ கண்காட்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து அவர், சமூக நீதிக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்றும் கூறியுள்ளார்.


Next Story