தமிழக கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கம்: சுப்ரீம் கோர்ட்


தமிழக கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கம்: சுப்ரீம் கோர்ட்
x
தினத்தந்தி 20 April 2018 12:32 PM IST (Updated: 20 April 2018 12:32 PM IST)
t-max-icont-min-icon

தமிழக கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. #TN #CooperativeSocietiesElection #SC

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தேர்தல் பணிகளை நிறுத்திவைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தேர்தல் நடவடிக்கைகளில் ஐகோர்ட் தலையிட்டு தடை விதிக்க முடியாது என்று கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசு சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

தமிழக அரசின் மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட், கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அனுமதி அளித்தது. தேர்தல் நடத்த அனுமதி அளித்த போதிலும், தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என கூறிய சுப்ரீம் கோர்ட்,  தேர்தலை நடத்தி விட்டு மே 3 ஆம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 
1 More update

Next Story