சாத்தூர் நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலாதேவியை ஆஜர்படுத்தியது போலீஸ்
சாத்தூர் நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலாதேவியை ஆஜர்படுத்தியது போலீஸ், நிர்மலாதேவியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம். #Nirmaladevi
மதுரை,
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிர்மலாதேவியை 10 நாட்கள் ஒப்படைக்கக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் அந்த கல்லூரியில் படித்த 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 16-ந்தேதி நிர்மலா தேவியை கைது செய்தனர். சில மணி நேர விசாரணைக்கு பிறகு மதுரை மத்திய சிறையில் நிர்மலாதேவி அடைக்கப்பட்டார்.
இதனிடையே நிர்மலா தேவி விவகாரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. 2 விசாரணை அமைப்புகளும் தனித்தனியாக விசாரணையை தொடங்கி உள்ளன.
இந்த நிலையில் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த போலீஸ் காவலில் 7 நாட்கள் அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை இன்று சாத்தூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கீதா முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. பேராசிரியை நிர்மலாதேவியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
சாத்தூர் நீதிமன்றத்துக்கு நிர்மலாதேவியை போலீஸ் அழைத்து வந்தபோது பெண்கள், வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பினர்.
சி.பி.சி.ஐ.டி. காவலுக்கு எத்தனை நாள் அனுமதி கிடைக்கும் என்பது இன்று பிற்பகலில் தெரியவரும். காவல் அனுமதி கிடைத்ததும் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரி தலைமையில் ரகசிய இடத்தில் வைத்து நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை விசாலாட்சிபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story