தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் 1-ந் தேதி மே தின பொதுக்கூட்டங்கள்
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் 1-ந் தேதி மே தின பொதுக்கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.
சென்னை,
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் 1-ந் தேதி மே தின பொதுக்கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. காஞ்சீபுரத்தில் ஓ.பன்னீர்செல்வமும், திருவள்ளூரில் எடப்பாடி பழனிசாமியும் பேசுகிறார்கள்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
உலக முன்னேற்றத்திற்காக தங்கள் ரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் அனைத்துத் தொழிலாளர்களின் வாழ்விலும் நல்வாழ்வுத் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு உலகெங்கும் மே முதல் நாள், “மே தினமாக” சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க “மே” தினத்தைக் கொண்டாடும் வகையில், அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் 1-5-2018 செவ்வாய்க்கிழமை அன்று “மே தின விழா பொதுக்கூட்டங்கள்” நடைபெற உள்ளன. அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்த மாவட்டங்களில் நடைபெறும் “மே” தின விழா பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
மே தின விழா பொதுக்கூட்டங்களில் பங்கேற்போர் பட்டியலையும் அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ளது. அதில், முக்கியமானவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்ட விவரம் வருமாறு:-
காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம் - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். திருவள்ளூர் கிழக்கு - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. வடசென்னை வடக்கு (கிழக்கு) - அவைத் தலைவர் இ.மதுசூதனன். மதுரை மாநகர் - துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி. தஞ்சாவூர் தெற்கு - ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. கரூர் - பாராளுமன்ற துணை சபாநாயகர் - மு.தம்பிதுரை. திண்டுக்கல் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
ஈரோடு புறநகர் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். கோவை மாநகர் - தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன். நாமக்கல் - அமைச்சர் பி.தங்கமணி. கோவை புறநகர் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. வடசென்னை தெற்கு - அமைச்சர் டி.ஜெயக்குமார். விழுப்புரம் வடக்கு - அமைச்சர் சி.வி.சண்முகம். மதுரை புறநகர் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். திருவள்ளூர் மேற்கு - அமைச்சர் மாபா பாண்டியராஜன். தூத்துக்குடி - அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ.
Related Tags :
Next Story