சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி; வாலிபரை மடக்கி பிடித்த போலீசார்


சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி; வாலிபரை மடக்கி பிடித்த போலீசார்
x
தினத்தந்தி 23 April 2018 10:41 AM GMT (Updated: 23 April 2018 10:41 AM GMT)

இந்தியன் வங்கியில் துப்பாக்கி முனையில் வாடிக்கையாளரிடம் இருந்து ரூ.6 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

சென்னை

சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் இன்று காலை மர்மநபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி அனைவரையும் மிரட்டியுள்ளார். வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை துப்பாக்கியை காட்டி மர்ம நபர் மிரட்டியுள்ளார்.

ஒருவரிடம் இருந்து ரூ. 6 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு வெளியே ஓட முயன்றுள்ளார். இதனையடுத்து வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கியில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் அவரை பிடிக்க முயன்றபோது துப்பாக்கியை காட்டி மிரட்டி வங்கியில் இருந்து வெளியே வந்திருகிறார் அந்த திருடன். இதனையடுத்து வங்கி அதிகாரிகள் சென்னை சாஸ்திரி நகர் போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல்அதிகாரியிடம் ரூ. 6 லட்சம் பணத்துடன் தப்பியோடிய நபர் சிக்கியுள்ளார்.

 பிடிபட்ட மர்ம நபரிடம் சாஸ்திரி நகர் போலீசார் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

குற்றவாளி கேளம்பாக்கத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியன் வங்கியில் கொள்ளையடிப்பதற்கு முன்பாக, அங்குள்ள மற்றொரு வங்கியில் கொள்ளையடிக்க அவர் முயன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கொள்ளையனிடம் இருந்து 2 துப்பாக்கிகளையும் ரூ. 6.35 லட்சத்தையும் போலீசார் பறிமுதல் செய்த அடையாறு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story