மாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு - மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி


மாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு - மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 24 April 2018 7:14 AM GMT (Updated: 24 April 2018 7:14 AM GMT)

மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே 2-ம்தேதி டெல்லி செல்ல உள்ளார். #EdappadiPalaniasamy #PMModi #CauveryIssue

சென்னை

மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்க, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் மோடியின் அழைப்பை தொடர்ந்து , மே 2-ல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளார். டெல்லியில் பிரதமருடனான சந்திப்பின் போது, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட தமிழகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story