பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக விமர்சித்த வழக்கு; எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமீன் மறுப்பு
பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக விமர்சித்த வழக்கில் எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டு உள்ளது. #SVShekhar
சென்னை,
பெண் பத்திரிகையாளர் ஒருவரது கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன் கையால் தட்டிக்கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ஆளுநரும் அந்த செய்தியாளரிடம் தன் செய்கைக்கு மன்னிப்பு கோரினார்.
இந்த சம்பவத்தை அடுத்து, நடிகர் எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் மிக மிக அநாகரிகமான வார்த்தைகளால் ஒரு பதிவை பகிர்ந்து இருந்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்த உடன் உடனடியாக நீக்கி விட்டார். ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எஸ்.வி. சேகருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி வெளியிட்ட கருத்துக்காக எஸ்.வி சேகர் மன்னிப்பு கோரினார். மன வருத்தம் ஏற்பட்டுள்ள பத்திரிகை சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.
எனினும், அவர் மீது பெண் பத்திரிகையாளர் புகார் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story