தூத்துக்குடியில் வன்முறையாளர்களை கலைக்க கண்ணீர் புகைகுண்டு வீச்சு
தூத்துக்குடியில் வன்முறையாளர்களை கலைக்க கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 99வது நாளை எட்டியது. இந்த நிலையில் இன்று 100வது நாள் போராட்டம் நடக்கிறது.
இதையொட்டி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.
போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களில் சிலர் கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் கலகக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். போலீசார் மற்றும் வன்முறையாளர்கள் இடையேயான மோதலில் போலீஸ் வாகனம் ஒன்று கவிழ்க்கப்பட்டது.
இதனால் தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை தடுக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். வன்முறையாளர்களை கலைக்க கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன. எனினும், அவற்றை கடந்து போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி தொடர்ந்து பேரணியாக முன்னேறி வருகின்றனர்.
Related Tags :
Next Story