மாநில செய்திகள்

கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்? ஸ்டாலின் சரமாரி கேள்வி + "||" + Why Were Automatic Weapons Used to Disperse Crowd Stalin on Thoothukudi Police Firing

கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்? ஸ்டாலின் சரமாரி கேள்வி

கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்? ஸ்டாலின் சரமாரி கேள்வி
கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்? என திமுக செயல் தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார். #SterliteProtest #MKStalin

சென்னை,
 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10-ம் வகுப்பு மாணவி உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. போராட்டக்காரர்களை கலைப்பதில் துப்பாக்கி சூடு விவகாரத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. 

இவ்விவகாரம் தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வரிசையான கேள்விகளை மாநில அரசுக்கு எழுப்பி உள்ளார். 

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார்? கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்? எந்த சட்டத்தின் கீழ் இது அனுமதிக்கப்பட்டது? அபாயகரமான காயங்களை தவிர்க்கும் ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் புல்லட்கள் பயன்படுத்ததாதது ஏன்? துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்படாதது ஏன்?. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்ததாது ஏன்? மாநில உளவுத்துறையின் ஒட்டுமொத்த தோல்விதான் துரதிஷ்டவசமான உயிரிழப்பிற்கு காரணம் என கூறுவது மிக சரியானதா? உளவுத்துறை போலீஸ் மற்றும் முதல்-அமைச்சகத்திற்கு நிலவரம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதா? 11 தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதில் பொறுப்பு யார்? சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தோல்வியடைந்த டிஜிபி மீது தமிழக அரசு நடவடிக்கையை எடுக்குமா? இவ்விவகாரத்தில் ஒட்டுமொத்த சம்பவத்தில் தன்னுடைய பொறுப்பு குறித்து தலைமை செயலாளர் விளக்கம் அளிப்பாரா? ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு நீதி கிடைக்குமா? என வரிசையான கேள்விகளை மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் தமிழக அரசுக்கு எழுப்பி உள்ளார். 



தொடர்புடைய செய்திகள்

1. கூட்டத்தைக் கலைக்கிறோம் என்ற பெயரில் குறி வைத்து சுட்டுத்தள்ளியிருக்கிறது காவல்துறை ஸ்டாலின் கண்டனம்
கூட்டத்தைக் கலைக்கிறோம் என்ற பெயரில் குறி வைத்து காவல்துறை சுட்டுத்தள்ளியிருக்கிறது என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். #SterliteProtest #MKStalin