தூத்துக்குடி , நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில், இணையதள சேவை முடக்கபட்டது.


தூத்துக்குடி , நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில், இணையதள சேவை முடக்கபட்டது.
x
தினத்தந்தி 23 May 2018 12:25 PM GMT (Updated: 23 May 2018 12:35 PM GMT)

தூத்துக்குடி , நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில், இணையதள சேவை முடக்கபட்டு உள்ளது.

சென்னை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் இறந்து பெண்கள் உட்பட மொத்தம் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 30க்கும்  மேற்பட்டோர் படுகாயங்களுடன் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, அண்ணாநகர் பகுதியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அருகே இன்று காலை போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.

போராட்டம் வலுவடைந்ததால், போலீசார் கண்ணீர் புகை வீசியும், ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி துப்பாக்கிகளால் சுட்டும் போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். நிலைமை எல்லைமீறி போனதால் போலீசார் இன்றும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், காளியப்பன் என்ற 22 வயது வாலிபர் உயிரிழந்ததை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் அண்ணாநகர் 6வது தெருவில்  மீண்டும் மோதல் வெடித்தள்ளது. ரோந்து சென்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது.

பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் வீடு ஒன்றில் தீப்பற்றியது. மீண்டும் ஆங்காங்கே பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் அண்ணாநகரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி , நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கலில், இணையதள சேவை முடக்கம் என தமிழக உள்துறை கூறி உள்ளது

Next Story