தலைமை செயலகத்தில் முதலமைச்சர் அறை முன் தர்ணா; ஸ்டாலின் - திமுகவினர் கைது


தலைமை செயலகத்தில் முதலமைச்சர் அறை முன் தர்ணா; ஸ்டாலின் - திமுகவினர் கைது
x
தினத்தந்தி 24 May 2018 6:43 AM GMT (Updated: 24 May 2018 6:43 AM GMT)

தலைமை செயலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை காவலர்கள் கைது செய்தனர். #MKStalin #DMK

சென்னை

தலைமை செயலகத்துக்கு சென்ற ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர், முதல்வர் பழனிசாமியை சந்திக்க அனுமதி கோரினர்.

உடனடியாக முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் முதல்வர் அறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை தலைமை செயலக 4-வது வாயில் முன்பு அமர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். முதலமைச்சர் அறை முன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு போலீசே காரணம் எனக்கூறி திமுகவினர் முழக்கமிட்டனர். தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் அறை முன் தர்ணாவில் ஈடுபட்ட ஸ்டாலின் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டார்.

இந்த தகவல் அறிந்த திமுக தொண்டர்கள், தலைமைச் செயலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தலைமை செயலகம் அருகே 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனால் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுகவினரின் போராட்டத்தால் ராஜாஜி சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

சென்னை தலைமை செயலகம் அருகே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்  சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதை தொடர்ந்து போலீசார் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.கவினர் கைது செய்யப்பட்டனர்.

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட வேனை மறித்து தி.மு.கவினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும் தி.மு.கவினருக்கும் இடையே  மோதல் ஏற்பட்டது.

Next Story