தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து குமரியில் உள்ள 4 கிராம மீனவா்கள் வேலைநிறுத்தம்


தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து குமரியில் உள்ள 4 கிராம மீனவா்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 25 May 2018 2:19 AM GMT (Updated: 25 May 2018 2:19 AM GMT)

தூத்துக்குடியில் நடைப்பெற்ற துப்பாக்கிச்சூட்டை கண்டித்து கன்னியாகுமரியில் உள்ள 4 கிராமங்களை சோ்ந்த நாட்டுப்படகு மீனவா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனா். #ThoothukudiMassacre

கன்னியாகுமரி,

தூத்துக்குடியில் நடைப்பெற்ற துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்களுடைய எதிர்ப்புகளை போராட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனா். இதைத்தொடர்ந்து அனைத்து கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ளனா்.

மேலும், கன்னியாகுமரியில் உள்ள மீனவா்கள் தங்களுடைய பங்கிற்காக கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தில் தற்போது ஈடுபட்டு வருகின்றனா். குமரி மாவட்டங்களை சுற்றியுள்ள 4 கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படது மீனவா்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனா்.

இந்நிலையில் ஆரோக்கியபுரம், சின்னதுறை, மணக்குடி, கீழமணக்குடி ஆகிய கிராமங்களை சோ்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லமால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

Next Story