தமிழகம் முழுவதும் திமுக-கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டம் -கைது
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக-கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டம். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட புதுமண தம்பதியினர்.
சென்னை
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று (வெள்ளிக்கிழமை) தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன் படி இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
சென்னை சைதாப்பேட்டை மற்றும் பெரம்பூர் பகுதிகளில் திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே திமுகவினர் தோழமை கட்சியினருடன் எம்எல்ஏ மா.சுப்பிரமணியம் தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். எழும்பூரில் கனிமொழி, ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.
சைதாப்பேட்டையில் மறியலில் ஈடுபட்ட மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை திமுகவினர் கூட்டணி கட்சியினருடன் முற்றுகையிட முயன்றனர். திமுக எம்.பி. கனிமொழி, திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்பு 700க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தம் அருகே புதுமண தம்பதியுடன் மு.க ஸ்டாலின் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
திருமணம் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. பின்னர் மு.க ஸ்டாலினும் புதுமண தம்பதிகளும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுராந்தகத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் கைது செய்யபட்டனர்.
Related Tags :
Next Story