தூத்துக்குடி: காயம் அடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனைக்கு இணையாக மருத்துவ சிகிச்சை- மருத்துவ கல்வி இயக்குநர்


தூத்துக்குடி: காயம் அடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனைக்கு இணையாக மருத்துவ சிகிச்சை- மருத்துவ கல்வி இயக்குநர்
x
தினத்தந்தி 26 May 2018 11:58 AM IST (Updated: 26 May 2018 11:58 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைக்கு இணையாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என மருத்துவ கல்வி இயக்குநர் எட்வின் ஜோ கூறி உள்ளார். #ThoothukudiShooting

சென்னை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை  மூடக்கோரி  நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது இதில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில் இதுவரை 7 பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 6 பேரின் உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை செய்ய வாய்ப்பில்லை. உறவினர்கள் ஒத்துழைக்காததால் பிரேத பரிசோதனை செய்ய வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல்  தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் மருத்துவ கல்வி இயக்குநர் எட்வின் ஜோ பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரில், இதுவரை 7 பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 11 பேரின் உடல்களில் இருந்த குண்டுகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு, தனியார் மருத்துவமனைக்கு இணையாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புபவர்கள் சொந்த விருப்பத்தின் பேரில் செல்லலாம், ஆனால் 49 பேரும் இங்கேயே சிகிச்சையை தொடருவதாக கூறியுள்ளனர் என கூறினார்

Next Story