மாநில செய்திகள்

அண்ணா திராவிடர் கழகம்: கட்சியின் பெயரை அறிவித்தார் திவாகரன்; கொடியும் அறிமுகம் + "||" + Anna Dravidar Kazagam: Divakaran declared party name

அண்ணா திராவிடர் கழகம்: கட்சியின் பெயரை அறிவித்தார் திவாகரன்; கொடியும் அறிமுகம்

அண்ணா திராவிடர் கழகம்:  கட்சியின் பெயரை அறிவித்தார் திவாகரன்; கொடியும் அறிமுகம்
அண்ணா திராவிடர் கழகம் என தனது கட்சியின் பெயரை அறிவித்து கொடியையும் அறிமுகம் செய்தார் திவாகரன்.

திருவாரூர்,

திருவாரூரின் மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகம் என தனது கட்சியின் பெயரை அறிவித்து உள்ளார் சசிகலாவின் சகோதரர் திவாகரன்.  தனது கட்சியை அறிவித்த அவர் அதற்கான கொடியையும் அறிமுகம் செய்து உள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்பொழுது, இக்கட்சியின் பொது செயலாளர் பொறுப்பினை நான் ஏற்கிறேன் என கூறியுள்ளார்.  கட்சிக்கான கொடி கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும்.  அதன் நடுவில் பச்சை நிறத்தில் நட்சத்திரம் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார்.