தென்காசி நோக்கி சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி 30 பேர் காயம்


தென்காசி நோக்கி சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி 30 பேர் காயம்
x
தினத்தந்தி 22 Oct 2018 10:32 AM IST (Updated: 22 Oct 2018 10:32 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற அரசு பேருந்து ஆலங்குளம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

நெல்லை

நெல்லையில் இருந்து  35-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தென்காசி நோக்கி அரசு பேருந்து  சென்றது. அந்த அரசுப்பேருந்து நல்லூர் விலக்கு அருகே சென்ற போது  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த, சிவராம பேட்டையை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் உயிரிழந்தார். கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட 30 பேர் காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
1 More update

Next Story