தீபாவளி அன்று பட்டாசு எப்போது வெடிக்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை,
நாடு முழுவதும் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் தீபாவளியின் போது இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
இத்தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில் விளக்கம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “பட்டாசு வெடிக்க விதித்த கட்டுப்ப்பாட்டால் பட்டாசு வெடிக்கும் உரிமையை தமிழக மக்கள் இழந்துள்ளனர். எனவே, தீபாவளியின்போது, அதிகாலை 4.30 மணி முதல் காலை 6.30 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கி அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, தமிழகம், புதுச்சேரி மற்றும் தென் மாநிலங்களில் தீபாவளி நாளில் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம். பட்டாசு வெடிக்கப்படும் நேரத்தை தென் மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதன்படி, தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையும் வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story