ரெயில்களில் அதிரடி சோதனை - ஒரே நாளில் அதிகபட்சமாக ரூ.20.19 லட்சம் அபராதம் விதிப்பு


ரெயில்களில் அதிரடி சோதனை - ஒரே நாளில் அதிகபட்சமாக ரூ.20.19 லட்சம் அபராதம் விதிப்பு
x

சென்னையில் ரெயில்களில் இன்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ஒரே நாளில் அதிகபட்சமாக ரூ.20.19 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட புறநகர், விரைவு மற்றும் பயணிகள் ரெயில்களில் 539 டிக்கெட் பரிசோதகர்கள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் இன்று ஒரே நாளில் 4,404 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக ரூ.20.19 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 1,934 பேரிடம் அபராதமாக ரூ.10.25 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. முறையான டிக்கெட் இன்றி பயணம் செய்த 1,832 பேரிடம் அபராதமாக ரூ. 8.41 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. 618 பேர் புகைப்பிடித்தல், எச்சில் துப்புதல் உள்ளிட்ட ரெயில்வே விதிமுறைகளை மீறி செயல்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

1 More update

Next Story