சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து “விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்” பொதுமக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து விலைமதிப்பற்ற உயிர்களை காத்து விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று பொதுமக்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
30-வது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் “சாலைப் பாதுகாப்பு வாரம்” கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, 30-வது சாலை பாதுகாப்பு வார விழா, 4-2-2019 முதல் 10-2-2019 வரை “சாலை பாதுகாப்பு உயிர்ப் பாதுகாப்பு” என்ற கருப்பொருளை மையப்படுத்தி கடைப்பிடிக்கப்படும்.
இச்சாலை பாதுகாப்பு வார விழாவில், தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு, ‘சீட் பெல்ட்’ அணிவது குறித்த விழிப்புணர்வு, ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள், சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றல், பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த போட்டிகள் நடத்தி பரிசு வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, சாலையில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திட, ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்புக்கென ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, சாலைப் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருவதுடன், அகில இந்திய வானொலி பண்பலை சேவைகளின் மூலம் நாள்தோறும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஒலிபரப்பு செய்தல், அவசர விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துதல், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ரோந்து குழுக்கள் ஏற்படுத்தி போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல், இளம் சிறார்களுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தி, பாதுகாப்பாக சாலையை பயன்படுத்துவதற்காக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சாலை பாதுகாப்பு மன்றங்கள் துவக்குதல் போன்ற திட்டங்களை சிறப்பான முறையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தியதன் காரணமாக, 2017-ம் ஆண்டைவிட 2018-ம் ஆண்டு, சாலை விபத்துகள் 3 சதவீதம் குறைந்துள்ளதுடன், சாலை விபத்துகளினால் ஏற்படும் இறப்புகள் 25 சதவீதம் குறைந்துள்ளது.
சாலை பாதுகாப்பு பணிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், இந்த ஆண்டு முதல், விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைக்க சிறப்பான நடவடிக்கை எடுக்கும் முதல் 3 மாவட்டங்களுக்கும், ஒரு சிறந்த காவல்துறை ஆணையரகத்திற்கும் முதல்-அமைச்சரின் விருது வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு, பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டாலும், சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க பொதுமக்கள் அனைவரும் மிதமான வேகத்துடன் வாகனங்களை இயக்கி, வாகனங்களில் பயணம் செய்வோர் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட்களை அணிந்து, வாகனங்களை ஓட்டும்போது கைப்பேசியை (செல்போன்) உபயோகப்படுத்தாமல், சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து, விலைமதிப்பற்ற தங்களின் உயிர்களை பாதுகாத்து விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story