அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை: முதல்வர்-துணை முதல்வரிடம் சமர்ப்பித்தது பொன்னையன் தலைமையிலான குழு


அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை:  முதல்வர்-துணை முதல்வரிடம் சமர்ப்பித்தது பொன்னையன் தலைமையிலான குழு
x
தினத்தந்தி 8 March 2019 5:39 AM GMT (Updated: 2019-03-08T11:15:39+05:30)

மக்களவை தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை பொன்னையன் தலைமையிலான குழு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியிடம் வழங்கியது.

சென்னை,

பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

மக்களவை தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்களான முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஒரு மாத காலமாக ஈடுபட்டு இருந்தனர். 

இதற்காக தமிழகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளை அறிந்து அதை தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்துள்ளனர். விவசாயிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளனர்.

ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையை தலைமை கழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொன்னையன் இன்று சமர்ப்பித்தார்.

Next Story