செய்தியாளர்களை பிரேமலதா ஒருமையில் பேசியது தவறானது - வைகோ


செய்தியாளர்களை பிரேமலதா ஒருமையில் பேசியது தவறானது - வைகோ
x
தினத்தந்தி 8 March 2019 8:07 PM IST (Updated: 8 March 2019 8:07 PM IST)
t-max-icont-min-icon

செய்தியாளர்களை பிரேமலதா ஒருமையில் பேசியது தவறானது என்று வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

திருச்சி மாவட்ட ம.தி.மு.க சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

செய்தியாளர்களை பிரேமலதா ஒருமையில் பேசியது தவறானது. அதை திருத்திக்கொள்ள வேண்டும். கருணாநிதியை சந்திக்க விஜயகாந்த் நேரம் கேட்டபோது ஸ்டாலின் நிச்சயம் மறுத்திருக்க மாட்டார். ரபேல் விவகாரத்தில் பிரதமர் மீதான சந்தேகம் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை தே.மு.தி.க வினர் முற்றுகையிட்டது கண்டனத்துக்குரியது. விபரீதத்தை விலைக்கு வாங்க வேண்டாம். உயிரை கொடுக்கவும் தயங்கமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story