பொள்ளாச்சியில் அ.தி.மு.க.வினரின் சட்டவிரோத மதுபான பார்களை மூடக்கோரி தி.மு.க.வினர் போராட்டம்
பொள்ளாச்சியில் அ.தி.மு.க.வினரின் சட்டவிரோத மதுபான பார்களை மூடக்கோரி தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட பார் நாகராஜ் (வயது 27) பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
நடிகர்கள் மற்றும் நடிகையர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் கடுமையான நடவடிக்கையும் உரிய தண்டனையும் வழங்க வலியுறுத்தி திருவாரூர், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவ மாணவியர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த பொள்ளாச்சி நாகராஜ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அ.தி.மு.க.வினரால் பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மதுபான கடைகளை மூடக்கோரி தி.மு.க.வினர் இன்று போராட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் வர தாமதம் ஆனதால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story