மக்களவை தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு


மக்களவை தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 March 2019 7:09 PM IST (Updated: 15 March 2019 7:09 PM IST)
t-max-icont-min-icon

மக்களவை தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ், இடதுசாரிகள் விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.  திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டன. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சிக்கு  நாகை, திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரு தொகுதிகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திருப்பூரில் சுப்புராயன், நாகையில் செல்வராஜ் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story