அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியீடு


அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 17 March 2019 10:23 AM IST (Updated: 17 March 2019 10:23 AM IST)
t-max-icont-min-icon

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு 5, பா.ம.க.வுக்கு 7, தே.மு.தி.க.வுக்கு 4, த.மா.கா., புதிய தமிழகம்,  புதிய நீதிக்கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. 

இந்த கூட்டணியில்,  இடம் பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கிரவுன் பிளாசா ஓட்டலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும்  இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொகுதிகள் பட்டியலை வெளியிட்டனர். 

அதிமுக

தென் சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
திருவண்ணாமலை 
சேலம் 
நாமக்கல் 
ஈரோடு
திருப்பூர்
நீலகிரி
பொள்ளாச்சி
கிருஷ்ணகிரி
கரூர்
பெரம்பலூர்
சிதம்பரம்
நாகை
மயிலாடுதுறை
மதுரை 
தேனி
நெல்லை
ஆரணி

பாட்டாளி மக்கள் கட்சி

திண்டுக்கல்
மத்திய சென்னை
ஸ்ரீபெரும்புதூர்
அரக்கோணம்
தர்மபுரி
கடலூர்
விழுப்புரம்

தேமுதிக

வடசென்னை
கள்ளக்குறிச்சி
திருச்சி
விருதுநகர்

புதிய தமிழகம்

தென்காசி

தமிழ் மாநில காங்கிரஸ்

தஞ்சாவூர்

புதிய நீதிக்கட்சி

வேலூர்

என்.ஆர்.காங்கிரஸ்

புதுச்சேரி

பாஜக

கோவை
தூத்துக்குடி
கன்னியாகுமரி
சிவகங்கை
ராமநாதபுரம்

Next Story