தென் மாநிலங்கள் மேல் உள்ள அக்கறையால் தான் ராகுல் வயநாட்டில் போட்டி; ப. சிதம்பரம்
தென் மாநிலங்கள் மேல் உள்ள அக்கறையால் தான் ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுகிறார் என ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி 3 முறை வெற்றி பெற்றுள்ளார். இந்த முறையும் அவர் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அவரை வலியுறுத்தினர். இதற்கு அவர் ஒப்புதல் அளித்து விட்டார்.
இதனை அடுத்து வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதனால் அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் ராகுல் போட்டியிடுகிறார்.
கேரளாவுக்கு கடந்த 4ந்தேதி தனது சகோதரி மற்றும் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொது செயலாளரான பிரியங்காவுடன் வயநாடு வந்த ராகுல் காந்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதன்பின் அந்த பகுதியில் பெரிய அளவில் பேரணி நடத்தி கட்சியின் வலிமையை காட்டினார்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறும்பொழுது, பா.ஜ.க.விற்கு தென் மாநிலங்கள் குறித்து அக்கறையில்லை. தென் மாநிலங்கள் மேல் உள்ள அக்கறையால் தான், ராகுல் காந்தி கேரளா வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த மக்களவை தேர்தலில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன் என தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story