ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று அண்ணா அறிவாலயம் வருகை


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று அண்ணா அறிவாலயம்  வருகை
x
தினத்தந்தி 16 April 2019 8:21 AM IST (Updated: 16 April 2019 8:21 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று அண்ணா அறிவாலயம் வருகை தர உள்ளார்.

அமராவதி, 

ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்திக்க அண்ணா அறிவாலயம் வருகை தர உள்ளார்.   திருவாரூரில் ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்துகிறார். 

கடந்த சில தினங்களுக்கு முன் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை சந்தித்து மனு அளித்த நிலையில், இன்று திமுக நிர்வாகிகளை சந்திக்கிறார். மக்களவை தேர்தலுக்கு பிந்தைய நிலைப்பாடு குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

1 More update

Next Story