தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குகள் பதிவு


தமிழகத்தில் காலை  9 மணி நிலவரப்படி  13.48 சதவீத வாக்குகள் பதிவு
x

தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகள், 19 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்து ஆர்வமுடன் மக்கள் வாக்களித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் தங்கள்  ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

 பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். 

 மேலும், சத்யபிரதா சாஹு கூறுகையில்,  தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.  1 சதவீத அளவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது, அது உடனடியாக சரிசெய்யப்படுகிறது”என்றார்.

Next Story