தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி? தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்


தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி? தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்
x
தினத்தந்தி 19 May 2019 2:39 PM GMT (Updated: 2019-05-19T21:20:58+05:30)

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் கடும் போட்டியிருக்கும் என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MakkalYaarPakkam #LokSabhaElections2019 #ElectionsWithThanthiTV

தமிழகத்தில் 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தந்தி டிவி வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் பல்வேறு இடங்களில் தேர்தல் அன்று வாக்களித்த மக்களை சந்தித்து, அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கேட்டறிந்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. விபரம்:-


ஈரோடு தொகுதி

தருமபுரி தொகுதியை திமுக கூட்டணியான மதிமுக வெல்ல வாய்ப்பு உள்ளது.  இங்கு திமுக-காங்கிரஸ் கூட்டணியான மதிமுகவிற்கு 41-47 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர். அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 39-45 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.  அமமுகவிற்கு என்று  6-9 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

மயிலாடுதுறை 

மயிலாடுதுறை தொகுதியை திமுக கூட்டணி வெல்ல வாய்ப்பு உள்ளது. இங்கு  திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 41-47 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர். அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 37-43 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அமமுகவிற்கு என்று 5-11 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

தருமபுரி

தருமபுரி தொகுதியை அதிமுக கூட்டணியான பாமக தட்டிச்செல்கிறது என தெரியவந்துள்ளது. இருப்பினும் இரு கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டியிருக்கும்  என்றே தெரிகிறது.  இங்கு அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 34-40 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 32-38 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர். அமமுகவிற்கு என்று 16-12 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

கரூர் 

கரூர் தொகுதியை திமுக தனதாக்கும் என தெரிகிறது. இங்கு திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 41-47 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர். அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 37-43 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அமமுகவிற்கு என்று 6-9 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 4-7 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

தேனி

தேனி தொகுதியில் அமமுக வாக்கை பிரித்தாலும் அதிமுக  வெற்றிப்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இங்கு அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக  35-41 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.  திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 31-37 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர். அமமுகவிற்கு என்று 19-25 பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  

நாகை

நாகை தொகுதியில் திமுக கூட்டணி வெற்றிப்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இங்கு திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 39-45 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர். அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 34-40 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அமமுகவிற்கு என்று 6-4 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 4-7 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 5-8 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

கோவை

அதிமுகவின் கோட்டையான கோவை தொகுதியில் திமுக-அதிமுக கூட்டணி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அதிமுக கூட்டணி கட்சியான பா.ஜனதா வெற்றிப்பெற வாய்ப்பு உள்ளது என தெரியவந்துள்ளது. இங்கு அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 37-43 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.  திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 35-41 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அமமுகவிற்கு என்று 7-10  சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 5-8 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

தஞ்சை

தஞ்சை தொகுதியில் அமமுக அதிகமான வாக்குகளை பிரிக்கிறது. திமுக வெற்றிப்பெற வாய்ப்பு உள்ளது என தெரியவந்துள்ளது. இங்கு திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 38-44  சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர். அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 31-37 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அமமுகவிற்கு என்று 13-19  சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 3-6 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

பொள்ளாச்சி

பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வெற்றிப்பெற வாய்ப்பு உள்ளது என தெரியவந்துள்ளது. இங்கு அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 40-46 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 37-43  சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர். அமமுகவிற்கு என்று 6-9 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 4-7 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

திருச்சி

திருச்சி தொகுதியில் அதிமுகவின் வாக்குகளை அமமுக பிரிப்பதால் திமுக வெல்வதற்கு வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்பில் தெரிகிறது. இங்கு திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 32-33  சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர். அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 28-34 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அமமுகவிற்கு என்று 20-26 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 5-8 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

பெரம்பலூர்

பெரம்பலூர் தொகுதியில் திமுக வெல்வதற்கு வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்பில் தெரிகிறது. இங்கு திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 41-47  சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர். அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 38-44 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அமமுகவிற்கு என்று 6-9 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 4-7 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

ஆரணி 

ஆரணி தொகுதியை அதிமுக வெல்வதற்கு வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்பில் தெரிகிறது. இங்கு அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 40-46 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 38-44  சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர். அமமுகவிற்கு என்று 4-10 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 3-6 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 
 
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக கூட்டணி வெற்றிப்பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. இங்கு திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 40-46 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 37-43 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அமமுகவிற்கு என்று 4-7 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 3-6 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 


கடலூர் 

கடலூர் தொகுதியில் திமுக- அதிமுக கூட்டணிகள் இடையே கடுமையான போட்டி இருக்கும் என தெரிகிறது. இங்கு திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 39-45 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 37-43 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அமமுகவிற்கு என்று 7-10 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 5-8 சதவீதம் பேரும், நாம் தமிழருக்கு என 4-7 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

நாமக்கல் 

நாமக்கல் தொகுதியில் திமுக- அதிமுக கூட்டணிகள் இடையே கடுமையான போட்டி இருக்கும் என தெரிகிறது. இரு கூட்டணிக்கும் இடையே ஒரு சதவீதம்தான் வேறுபாடு என்பது உள்ளது. இங்கு திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 42-48 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 41-47 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அமமுகவிற்கு வாக்களித்தோம் என்று  4-10 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.  

ஸ்ரீபெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வெற்றிப்பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.  திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 39-45 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 35-41 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.  அமமுகவிற்கு என்று 5- 8 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 5-8 சதவீதம் பேரும், நாம் தமிழருக்கு என 3-6 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

விழுப்புரம் 

விழுப்புரம் தொகுதியில் அதிமுக, திமுக கூட்டணி இடையே கடுமையான போட்டி நிலவினாலும் அதிமுகவிற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.  இங்கு அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 41-47 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 39-45 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அமமுகவிற்கு என்று 6-9 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 3-6 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

திருவள்ளூர் தொகுதி

திருவள்ளூர் மக்களவை தொகுதியில் அதிமுக வெற்றிப்பெற வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. தேர்தலுக்கு பின்னர் 39-45 சதவீதம் பேர் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்ததாக கூறியுள்ளனர். திமுகவிற்கு 35-41 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அமமுகவிற்கு என்று 7-10 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யத்திற்கு 4-7 சதவீதம் பேரும், நாம் தமிழருக்கு 3-6 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

மத்திய சென்னை

மத்திய சென்னையில் திமுக கூட்டணிக்கு வாக்களித்ததாக 38-44 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணிக்கு 35-41 சதவீத பேர் வாக்களித்ததாகவும், அமமுகவிற்கு 8-11 சதவீத பேர் வாக்களித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.  மக்கள் நீதி மய்யத்திற்கு 6-9 சதவீதம் பேரும், நாம் தமிழருக்கு 5-8 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு 40-46 சதவீதம் பேர் வாக்களித்ததாக கூறியுள்ளனர். திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு 39-45 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அமமுகவிற்கு என்று 5-8 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யத்திற்கு 4-7 சதவீதம் பேரும், நாம் தமிழருக்கு 3-6 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக கூட்டணி முன்னிலைப் பெறுகிறது.  அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு  39- 45 சதவீதம் பேர் வாக்களித்ததாக கூறியுள்ளனர். திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு 36-42 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அமமுகவிற்கு என்று 4-10 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.  

வடசென்னை

 வடசென்னை மக்களவை தொகுதியில் திமுக வெற்றிப்பெறுவதற்கு வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

வடசென்னை தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 41-47 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு 34-40 சதவீதம் பேரும், அமமுகவிற்கு என்று 6-9 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என  6-9 சதவீதம் பேரும், நாம் தமிழருக்கு 4-7 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

சேலம் தொகுதி

முதல்-அமைச்சர் பழனிச்சாமியின் சொந்த ஊரான சேலம் தொகுதியில் அதிமுக கூட்டணி வெற்றிப்பெற வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. சேலம் தொகுதியில் அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 41-47 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 38-44 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.   அமமுகவிற்கு என்று 6-9 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 4-7 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

அரக்கோணம் 

அரக்கோணம் தொகுதியில் திமுக- அதிமுக கூட்டணிகள் இடையே கடுமையான போட்டி இருக்கும் என தெரிகிறது. இங்கு அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 38-44 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 37-43 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.   அமமுகவிற்கு என்று 7-10 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 4-7 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

Next Story