தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து மு.க.ஸ்டாலின் பேட்டி


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 20 May 2019 7:04 AM GMT (Updated: 2019-05-20T12:34:22+05:30)

மத்திய அரசில் அங்கம் வகிப்பது குறித்து மே 23-க்கு பிறகு தெரிவிக்கப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை

தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை. 23-ம் தேதி மக்களின் தீர்ப்பு தெரியும்.

மே 23-ந் தேதி டெல்லியில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது என்று உங்களிடம் சொன்னது யார்? என செய்தியாளர்களிடம்  ஸ்டாலின்  கேள்வி எழுப்பினார். மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தான் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

அடுத்து மத்தியில் அமையும் அரசில் திமுக அங்கம் வகிக்குமா? என்ற கேள்விக்கு மே 23-க்கு பிறகு தெரிவிக்கப்படும் என ஸ்டாலின் பதில் அளித்தார்.

Next Story