தேர்தல் செய்திகள்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு + "||" + Pon radhakrishnan trails in kanniyakumari

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
கன்னியாகுமரி,

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக 300 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த முறையும் களமிறக்கப்பட்டார்.  ஆனால் தற்போது அவர் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

அவரை எதிர்த்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ ஆக உள்ள வசந்தகுமார் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலிலும் கூட முதலிடத்தை பொன் ராதாகிருஷ்ணனும், இரண்டாம் இடத்தை காங்கிரசை சேர்ந்த வசந்தகுமாரும் பெற்றனர். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணனை விட சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்திலேயே வசந்தகுமார் தோல்வி அடைந்தார்.