இந்துத்துவா கொள்கை மூலம் தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சி அடைய செய்யலாம்: சுப்ரமணியன் சுவாமி


இந்துத்துவா கொள்கை மூலம் தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சி அடைய செய்யலாம்: சுப்ரமணியன் சுவாமி
x
தினத்தந்தி 24 May 2019 7:21 AM GMT (Updated: 24 May 2019 7:21 AM GMT)

இந்துத்துவா கொள்கை மூலம் தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சி அடைய செய்யலாம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.

புதுடெல்லி,

மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில்,  பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

அப்போது சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது:-  கடந்த 5 ஆண்டுகளில்  மக்களுக்கு பாஜக அரசு நன்மை செய்துள்ளது. பாஜக ஆட்சி தொடர வேண்டும் என்று தான் மக்கள் மீண்டும் வாக்களித்துள்ளனர்.

இந்துத்துவா கொள்கை மூலம் தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சி அடைய செய்யலாம். தமிழகத்தில் தினகரன் பல சிரமங்களுக்கு மத்தியில் தேர்தலை சந்தித்துள்ளார் என்றார்.

Next Story