தி.மு.க. பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்டார் மு.க. ஸ்டாலின்


தி.மு.க. பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்டார் மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 2 Jun 2019 7:29 AM IST (Updated: 2 Jun 2019 7:29 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. பொதுக்கூட்ட ஏற்பாடுகளை அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

சென்னை,

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகின்ற ஜுன் 3 ஆம் தேதி முன்னாள் தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

இதற்காக நடைபெற்று வரும் ஏற்பாடுகளை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். தி.மு.க. பொது செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இதற்காக 100 அடி உயரத்தில் தி.மு.க.வின் கட்சிக்கொடி மற்றும் 100 அடி உயரத்தில் கருணாநிதியின் கட் அவுட்டும் வைக்கப்பட்டுள்ளன.

Next Story