மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது, தமிழகத்தில் 48.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி


மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது, தமிழகத்தில் 48.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
x
தினத்தந்தி 5 Jun 2019 2:04 PM IST (Updated: 5 Jun 2019 3:04 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு பின் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு மே மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில் 188 மையங்கள் உள்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ், ஆங்கிலம், இந்தி என 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது.  14 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் தேர்வு எழுதினர். விண்ணப்பம் செய்தவர்களில்1 லட்சத்து 8 ஆயிரத்து 621 பேர் தேர்வு எழுதவில்லை. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை புதன்கிழமை வெளியிடுகிறது என தெரிவிக்கப்பட்டது..

நீட் தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு பின் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2 மணி நேரங்களுக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகளை  www.nta.ac.in, www.ntaneet.nic.in ஆகிய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 

தமிழகத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் 48.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சியை பெற்றுள்ளனர். இதுவே கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 39.56 சதவீதம் ஆகும்.  டெல்லியில் அதிகப்பட்சமாக 74.92 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

Next Story