நாடாளுமன்ற மேலவை தேர்தலில் எனக்கு வாய்ப்பு வழங்கிய தி.மு.க. தலைவருக்கு நன்றி தெரிவித்தேன்; வைகோ பேட்டி


நாடாளுமன்ற மேலவை தேர்தலில் எனக்கு வாய்ப்பு வழங்கிய தி.மு.க. தலைவருக்கு நன்றி தெரிவித்தேன்; வைகோ பேட்டி
x
தினத்தந்தி 2 July 2019 7:31 PM IST (Updated: 2 July 2019 8:48 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற மேலவை தேர்தலில் எனக்கு வாய்ப்பு வழங்கிய தி.மு.க. தலைவருக்கு நன்றி தெரிவித்தேன் என வைகோ பேட்டியளித்து உள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெற்றது.  இதற்காக நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் அக்கட்சியில் ஒருவருக்கு மேலவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என உடன்படிக்கை ஏற்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற மேலவை தேர்தலில் ம.தி.மு.க. சார்பில் வைகோ போட்டியிடுவார் என ம.தி.மு.க. உயர்நிலை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதனை தொடர்ந்து தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்பிற்கு பின் வைகோ அளித்துள்ள பேட்டியில், நாடாளுமன்ற மேலவை தேர்தலில் எனக்கு வாய்ப்பு வழங்கிய தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன்.  பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்துவது பற்றி சிந்திக்கலாம் என கூறியுள்ளார்.

Next Story