வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அறிவிப்புகள் வெளியிடலாமா? மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு


வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அறிவிப்புகள் வெளியிடலாமா? மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
x
தினத்தந்தி 5 July 2019 11:30 PM GMT (Updated: 5 July 2019 10:03 PM GMT)

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், வேலூர் நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

சென்னை, 

மு.க.ஸ்டாலின்:-தேர்தல் கமிஷனால், வேலூர் நாடாளுமன்றத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தேதி அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு நடத்தை விதிமுறைகள் தானாக அமலுக்கு வந்து விடுகின்றது. ஆனால், மின்துறை மானியக்கோரிக்கையின்போது அந்த துறை அமைச்சர், அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிவிப்புகளில் கோவை, சேலம், நெல்லை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், வேலூர் ஆகிய 7 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அமைந்துள்ள போதை மீட்பு மையங்களுக்கு 3.64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இது தேர்தல் விதிமுறையை மீறிய செயலாக இருக்கின்றது. எனவே, இப்படிப்பட்ட அறிவிப்புகளை வெளியிடுவது முறையா?.

அமைச்சர் தங்கமணி:-மானியக்கோரிக்கை மீதான அறிவிப்பு வெளியிடும்போது தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில் இந்த அறிவிப்புகள் எல்லாம் ஏற்கனவே தயார் செய்யப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் வேலூர் மட்டும் அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story