பொள்ளாச்சியில் மீண்டும் பரபரப்பு : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 9 பேர் கைது
பொள்ளாச்சி செரீப் காலனியை சேர்ந்தவர் அமானுல்லா (வயது 25). இவருக்கும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்தனர். அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது.
பொள்ளாச்சி,
சிறுமியுடன் தனக்கு உள்ள பழக்கம் பற்றி தனது நண்பரான ஆண்டாள் அபிராமி நகரை சேர்ந்த பகவதியிடம் (26) அமானுல்லா கூறினார். இதையடுத்து பகவதியும் அந்த சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி அந்த சிறுமியை அமானுல்லா தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று, மீண்டும் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தந்தையிடம் கூறினார்.
இதையடுத்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் கொடுத்தார். இதன் மீது அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் அமானுல்லா, பகவதி உள்பட 10 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
போலீசார் தீவிர விசாரணை நடத்தி அமானுல்லா, பகவதி, ஜமீன்ஊத்துக்குளியை சேர்ந்த முகமது அலி (28), அழகாபுரி வீதியை சேர்ந்த டேவிட் செந்தில் (30), செரீப்காலனியை சேர்ந்த முகமது ரபீக் (28), மடத்துக்குளத்தை சேர்ந்த அருண்நேரு (28), குமரன் நகரை சேர்ந்த சையது முகமது (25), சி.டி.சி. காலனியை சேர்ந்த இர்ஷாத்முகமது (28), இர்ஷாத் பாஷா (28) ஆகிய 9 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மேலும் திண்டுக்கல்லை சேர்ந்த பிரபு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே பொள்ளாச்சியில் இளம்பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. தற்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 9 பேர் கைதான சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story