110 விதியின் கீழ் அறிவிப்புகள் திருச்சியை தாண்டுவது இல்லை; தி.மு.க. எம்.எல்.ஏ. பேச்சால் பரபரப்பு


110 விதியின் கீழ் அறிவிப்புகள் திருச்சியை தாண்டுவது இல்லை; தி.மு.க. எம்.எல்.ஏ. பேச்சால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 July 2019 1:05 PM IST (Updated: 12 July 2019 1:05 PM IST)
t-max-icont-min-icon

பேரவை விதி 110ன் கீழ் வெளியிடும் அறிவிப்புகள் திருச்சியை தாண்டுவது இல்லை என்ற தி.மு.க. எம்.எல்.ஏ. அவையில் பேசியது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

சட்டப்பேரவையில் நடைபெற்ற தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க. உறுப்பினர் சாத்தூர் ராமச்சந்திரன், தென் மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள் என்னதான் செய்கிறார்களோ என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் சம்பத், தென் மாவட்டங்களில் மட்டும் 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தொழில் துவங்க உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் தென்மாவட்டங்களை அரசு புறக்கணிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

Next Story