பூலித்தேவனின் 304வது பிறந்த நாள்; துணை முதல் அமைச்சர் மரியாதை


பூலித்தேவனின் 304வது பிறந்த நாள்; துணை முதல் அமைச்சர் மரியாதை
x
தினத்தந்தி 1 Sept 2019 11:33 AM IST (Updated: 1 Sept 2019 11:33 AM IST)
t-max-icont-min-icon

பூலித்தேவனின் 304வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு துணை முதல் அமைச்சர் மரியாதை செலுத்தினார்.

நெல்லை,

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பூலித்தேவனின் 304வது பிறந்த நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.  இதனையொட்டி நெல்லையில் நெற்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல் அமைச்சர், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறினார்.

முதல் அமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சியினர் கீழ்தரமான அரசியல் செய்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

Next Story