தெலுங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம்; தமிழக ஆளுநர் வாழ்த்து
தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ள தமிழிசைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
தெலுங்கானா ஆளுநராக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து வரும் அவரது பதவி காலம் வருகிற டிசம்பரில் முடிவடைய உள்ளது. தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் தொலைபேசி வழியே தமிழிசையை தொடர்பு கொண்டு, ஆளுநர் பணியை சிறப்பாக மேற்கொள்ள தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
Related Tags :
Next Story