நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழி வெற்றியை எதிர்த்து வழக்கு
நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு கனிமொழி வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து தூத்துக்குடியை சேர்ந்த ஏ.சந்தானகுமார், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை,
‘நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் பல்வேறு விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளது. கணவரின் வருமானம் என்ன என்பதை குறிப்பிடாதது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தவறு. எனவே கனிமொழியின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டதும் சட்டவிரோதமானது. எனவே அவர் வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கவேண்டும்’ என்று அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.மகேஷ் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்’ என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story