ரெயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிப்பு: கனிமொழி தலைமையில் திமுகவினர் முற்றுகை போராட்டம்
ரெயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனிமொழி தலைமையில் திமுகவினர் தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சென்னை,
ரெயில்வே ஊழியர்களுக்கான போட்டித் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கனிமொழி தலைமையில் திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு மற்றும் ரெயில்வே வாரியத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ரெயில்வே போட்டி தேர்வுகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு, கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
Related Tags :
Next Story