திமுக என்பது ஜனநாயக கட்டமைப்பு கொண்ட கட்சி - மு.க. ஸ்டாலின்


திமுக என்பது ஜனநாயக கட்டமைப்பு கொண்ட கட்சி - மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 5 Oct 2019 6:06 AM GMT (Updated: 5 Oct 2019 6:06 AM GMT)

திமுக என்பது ஜனநாயக கட்டமைப்பு கொண்ட கட்சி என்று அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமமுகவினர் திமுகவில் இணைந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:- விரைவில் உள்ளாட்சி தேர்தல் என்பது "வரும் ஆனால் வராது" என்ற திரைப்பட வசனம் போல் இருந்து வருகிறது.  திமுக என்பது ஜனநாயக கட்டமைப்பு கொண்ட கட்சி. பிற கட்சிகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஊக்கப்படுத்த ஆட்கள் இல்லை, ஆனால் திமுகவில் அந்த நிலை இல்லை. 

இடைத்தேர்தலில் மட்டும் அல்ல, ராதாபுரத்திலும் திமுக தான் வெற்றி பெறும் என செய்தி வரும். தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சி அல்ல. பாஜக ஆட்சி. ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையால் இன்பதுரை தற்போது துன்பதுரை ஆகிவிட்டார்.  

சூழ்ச்சி மூலமாகத்தான் 2016-ல் அதிமுக வெற்றி பெற்றது. முறையாக தேர்தல் நடந்திருந்தால் இந்த நேரம் திமுக ஆட்சியில் இருந்திருக்கும். வாக்கு எண்ணிக்கையின் போது காலையிலேயே பிரதமர் மோடி வாழ்த்துச் சொன்னதுதான் அதிமுக வெற்றிக்கு காரணம்.  மணிரத்னம், ரேவதி உள்பட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை வாபஸ் பெற வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.

Next Story