ராமநாதபுரத்தில் கடல்நீர் உள்வாங்கியது; மீனவர்கள் அதிர்ச்சி தகவல்
ராமநாதபுரத்தில் கடல்நீர் 200 மீட்டருக்கு மேல் உள்வாங்கியது என மீனவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர்.
ராமேசுவரம்,
ராமநாதபுரத்தில் உப்பூர் பகுதியில் கடல்நீர் 200 மீட்டருக்கு மேல் உள்வாங்கியுள்ளது. இதேபோன்று ராமேஸ்வரத்தில் சங்குமால் கடற்பகுதியிலும் கடல்நீர் உள்வாங்கியுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.
ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் கடந்த ஜூனில் பல அடி தூரம் கடல் உள்வாங்கியது. இதன்பின் அன்று பகல் 3 மணிக்கு மேல் மீண்டும் கடல்நீர் பழைய நிலைக்கு திரும்பியது. இதனால் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில் சேவை அன்று பகுதியளவு பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், 4 மாதங்களுக்கு பின் அங்கு மீண்டும் கடல்நீர் உள் வாங்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
Related Tags :
Next Story