தமிழகத்தின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 9 Oct 2019 2:56 PM IST (Updated: 9 Oct 2019 2:56 PM IST)
t-max-icont-min-icon

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக மழைபெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, கரூர், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடைக்கானலில் 8 செ.மீ மழையும், தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி பகுதியில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும் வால்பாறை, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் 5 செ.மீ மழையும், சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் வானிலை ஆயும் மையம் தெரிவித்துள்ளது.

Next Story