டாக்டர் பட்டம் பெறவுள்ள முதலமைச்சர் பழனிசாமிக்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து


டாக்டர் பட்டம் பெறவுள்ள முதலமைச்சர் பழனிசாமிக்கு  தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து
x
தினத்தந்தி 20 Oct 2019 2:51 PM IST (Updated: 20 Oct 2019 2:51 PM IST)
t-max-icont-min-icon

டாக்டர் பட்டம் பெறவுள்ள முதலமைச்சர் பழனிசாமிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் அறிவித்தது. இன்று (20 ஆம் தேதி)  முதலமைச்சர் பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. 

இந்நிலையில், டாக்டர் பட்டம் பெறவுள்ள முதலமைச்சர் பழனிசாமிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்,

சவாலான சூழ்நிலையில் ஆட்சிப்பொறுப்பை ஏற்று சாமானிய மக்களின் அன்றாட தேவைகளை தீர்க்க நல்ல திட்டங்களைத்தீட்டி சிறப்பாக முதல்வர் பணியாற்றும் அண்ணன் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பதற்கு பாராட்டி நற்பணி தொடர வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
1 More update

Next Story