ஆட்சியில் உள்ள தவறை சுட்டி காட்டுவது எதிர்க்கட்சி தலைவரின் கடமை - மு.க.ஸ்டாலின்
ஆட்சியில் உள்ள தவறை சுட்டி காட்டுவது எதிர்க்கட்சி தலைவரின் கடமை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை வானகரத்தில் நடைபெற்ற தி.மு.க நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஆட்சியில் உள்ள தவறை சுட்டி காட்டுவது எதிர்க்கட்சி தலைவரின் கடமை, ஆனால் முதலமைச்சர் கோபப்படுகிறார். எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்படுவேன் என சட்டசபையில் சொன்னேன், அதன்படியே நடக்கிறேன். 2 இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு, பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது, ஆனால் இந்த வெற்றி தொடராது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற தயாராகுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story