நடிகர் ரஜினிகாந்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் வாழ்த்து + "||" + MDMK General Secretary Vaiko greets actor Rajinikanth on the phone
நடிகர் ரஜினிகாந்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சென்னை,
கோவாவில் 50-வது சர்வதேச திரைப்பட விழா வரும் நவம்பர் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பு நட்சத்திர விருது (Icon of Golden Jubliee) வழங்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.
விருது வழங்குவதாக அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் வழியே தனது நன்றியை தெரிவித்து கொண்டார். இந்நிலையில், சிறப்பு நட்சத்திர விருது பெறவுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.